ரணில் விக்கிரம சிங்க இப்போது ஒரு சாதாரண வாகனத்தின் சாரதி அல்ல. மாறாக, இலங்கையைக் காப்பாற்றுவதற்கான‘அம்பியூலன்ஸ்’வாகனத்தின் சாரதியாக மாறியுள்ளார்.
அவர் எல்லோரையும் உரிய நேரத்தில் கொண்டு சென்று காப்பாற்றுவாரா இல்லையா என்பது இப்போதைக்கு தெரியாது. ஆனால்,அவசிய முள்ளவர்கள் ஏறிக் கொள்ளலாம் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
முஸ்லிம் அரசியலைமையப்படுத்தியேஅவர் இக்கருத்தைமுன்வைத்திருந்தாலும்,நாட்டின் இன்றைய சூழ்நிலையில், இது பெருந்தேசிய,சிறுபான்மைஅரசியல்வாதிகள் எல்லோருக்கும் பொருத்தமானதாகவேகொள்ளலாம்.
ஆனாலும்,பெரும் நம்பிக்கையுடன் நாட்டின் சாரதியாகபதவிக்குஅமர்த்தப்பட்டரணில் மீதானநம்பிக்கைமேலும்மேல் நோக்கிநகரவில்லை.
சிற்சிலசிறிய பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படுவது போன்ற தோற்றப்பாடு உருவானாலும் கூட , நிஜத்தில் மக்கள் படுகின்ற அவதியும் வாழ்வியல் நெருக்கடிகளும் துளியளவும் குறைந்த பாடில்லை.
அம்பியூலன்ஸ் வண்டியை ஓட்டுவது ரணில் என்றாலும் ,அதற்கு வழி சொல்வதும் பின்னால் இருந்து இயக்குவதும் ராஜபக்ஷ குடும்பம் என்ற விடயம் பகிரங்கமாகவே பேசப்படுகின்றது.
இதற்குப் பின்னாலுள்ள இந்தியா,அமெரிக்கா , சீனாஆகியவற்றின் புவிசார் அரசியல் நகர்வுகள் இன்னும் பொதுவெளியில் பெரியளவில் பேசப்படவில்லை.
இதற்கிடையில், 21ஆவது அரசியலமைப்புதிருத்தம் பற்றியபேச்சுக்கள் சூடுபிடித்துள்ளன. இது அவசியமானதும் கட்டாயமாகசெய்யப்படவேண்டியதும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மொட்டுக்களோ அல்லது ‘முட்டுக்களோ’ இதற்குஎதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக இதனைக் கைவிட்டுவிடமுடியாது.
உடனடியாகஉத்தேசஅரசியலமைப்புதிருத்தத்தைகொண்டுவருவதில்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,நீதிஅமைச்சர் எனப் பலர் முனைப்பாகசெயற்படுகின்றனர்.
பலகட்சிகள் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன. சிலகட்சிகள் முரண்டுபிடிக்கின்றன.
ஓப்பீட்டளவில் அதிகாரம் குறைந்த பிரதமர் பதவியில் இருந்து கொண்டு , நிறைவேற்று அதிகாரத்தை நீக்கிய சாதனையை நிகழ்த்துவதுடன் , காலம் இடம் கொடுத்தால் மேலும் அதிகாரமுள்ள பிரதமர் பதவியையும் , சிலவேளை கொஞ்சக்காலமாவது ஜனாதிபதி பதவியையும் சுகிக்கும் கனவுரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கலாம்.
19ஆவது திருத்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்டு 20ஆவது திருத்தத்தின் மூலம் வலுவிழக்கச் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல் உள்ளடங்கலாக மேலும் பல முன்மொழிவுகளை மீளக் கொண்டுவரும் ஒருதிருத்தமாக பிரதமரும் எதிர்க்கட்சியும் இதனைகருதுகின்றன.
மஹிந்தகட்டிவைத்தசாம் ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமான, 20இன் அளவு கடந்த அதிகாரங்களை நீக்குவதற்கான மாற்றுதிருத்த மாகமஹிந்த ஆதரவு அணியினர் இதனைப் பார்க்கின்றனர்.
வேறுயாரும் ஜனாதிபதியாகவந்து தம்மீதான பிடியை இறுக்குவதற்கு இடையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது நல்லது என்று ராஜபக்ஷக்கள்; கருதலாம்.
இன்னும் பலவருடங்களிற்குப் பிறகேனும் ராஜபக்ஷக்கள் யாராவதுபிரதமராகவந்தால்,அவருக்குஅதிகாரங்கள் கிடைக்கும் விதத்தில் பிரதமர் பதவியைச் சுற்றிலும் அதிகாரங்கள் குவிக்கப்படுவதற்கு இது ஒருஆரம்பப்படியாக இருக்கலாம் என்றும் ராஜபக்ஷக்கள் கணக்குப் போடலாம்.
இதேவேளை, ஜனாதிபதிகொள்கையளவில் இதற்குபச்சைகொடிகாட்டினாலும்,தற்போதுமொட்டுஅணியினர் செயற்படும் விதம் சந்தேகத்தைஉண்டுபண்ணுகின்றது.
மறுபுறத்தில், சஜித் பிரேமதாசமற்றும் அனுரகுமாரதிசாநாயக்கபோன்றகட்சித் தலைவர்களும் கூட்டிக் கழித்துப் பார்த்துநிலைப்பாடுகளைஎடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஉள்ளிட்டதமிழ்த் தேசியக் கட்சிகள் மிகக் கவனமாகஉற்றுநோக்குகின்றன. ‘ரணில் ராஜபக்ஷதான் நாட்டைஆளுகின்றார்’என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இது பலஉள்ளர்த்தங்களைக் கொண்டது. இருப்பினும் , இறுதிவரைபை பார்த்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஆனால், முஸ்லிம் கட்சிகள், தலைவர்கள் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர்கள் இந்தநிமிடம் வரை 21ஆவது அரசியலமைப்புதிருத்தம் தொடர்பில் தம்முடையநிலைப்பாடுகள் என்ன என்பதை அறிவிப்புச் செய்யவில்லை.
முட்டாசு கடையைக் கண்ட அல்லது பொம்மைக் கடைக்குள் நுழைந்த குழந்தையைப் போல அப்படியே ஸ்தம்பித்துப் போய் நிற்கின்றார்கள். இதுதான் வழக்கமானபாணியும்கூட.
உண்மையில், இலங்கை அரசியலமைப்பு அந்தளவுக்கு மோசமான தோமக்களுக்கு விரோதமானதோ அல்ல. அதனை மக்களுக்காக சரி வர பாவிக்கக் கூடிய ஆட்சியாளர்களை நாடு காணவில்லை. ஆகவே,‘நமக்கு அரசியலமைப்பு வாய்க்கவில்லை ’என்று சொல்வதை விட ‘ ஆட்சியாளர்கள் வாய்க்கவில்லை ’ என்று சொல்வதே பொருத்தமான தாகும்.
இதுவரைகாலமும் அதிகாரத்தில் கோலோச்சியவர்கள் – நிறைவேற்றுஅதிகாரம் உள்ளடங்கலாக , அரசியலமைப்பிலும் சட்டத்திலும் காணப்படும் பல ஏற்பாடுகளை மக்கள் நலன் பேணும் வகையில் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு , அவர்களது தவறுகளை எல்லாம் அரசியலமைப்பு மீதும் சட்டத்தின் மீதும் போட்டு விட்டு நழுவி விடுகின்ற போக்கையே தொடர்ச்சியாக கண்டு வருகின்றோம். அதில் ஒருஅங்கமாகவும் உத்தேசதிருத்தத்தை பார்க்கலாம்.
அதாவது,மக்கள் தம்மை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்குமாறும் இந்த நிலைக்கு காரணமான ஆட்சியாளர்களை முற்றாக நீக்கு மாறும் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், ஜனாதிபதி மீதான பிரதான எதிர்ப்பு முன்னாள் பிரதமர் மீதுலாவகமாக திருப்பி விடப்பட்டது. ரணில் பிரதமரானாலும் கூட,‘பழைய மொந்தையிலேயே புதியகள் ’ ஊற்றிவைக்கப்பட்டுள்ளது.
இப்போது, 21ஆவது திருத்தம் பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளன. அதாவது,19ஆவது திருத்தத்தை வலுவற்றதாக்கி, 20ஆவது திருத்தத்தின் மூலம் அதீத அதிகாரத்தைப் பெற்று , அதனை தவறாக பயன்படுத்தியவர்களை பாதுகாத்துக் கொண்டு,‘அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகள் தான் எல்லாவற்றுக்கும் காரணம் ’என்று மறை முகமாகச் சொல்ல முற்படுகின்றார்கள்.
அதிகாரங்களை ஆட்சியாளர்கள் தமது அரசியல் நலனுக்காக அல்லாமல் மக்களின் விடிவுக்காக பயன்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால்,அதனைச் செய்யத் தவறியவர்கள் எல்லோரும் இப்போது,‘அரசியலமைப்பில் உள்ள குறைபாட்டை திருத்தினால் எல்லாம் சரியாகிவிடும்’என்று கூறுவதைப் போலுள்ளது.
எவ்வாறிருப்பினும்,அதிகாரங்களை மக்களுக்கு சார்பாக ஆட்சியாளர்கள் பயன்படுத்தப்படவில்லை என்றால் ,அந்தஏற்பாடுகள் மக்களுக்கு அனுகூலமளிக்கும் விதத்தில்திருத்தப்படுவதைத் தவிரவழியில்லை.
அந்தவகையில் 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதுதவிர்க்கமுடியாதது.
ஆனால், இலங்கைமக்கள் இன்றுபோராடிக் கொண்டிருப்பது வாழ்வாதார நெருக்கடியையும் பொருளாதார மீட்சியையும் வேண்டியாகும்.
முறைமைமாற்றம் ஏற்படவேண்டும். மொத்தமான ஆட்சிமாற்றம் ஏற்படுவதுடன்,நாட்டைக் குட்டிச் சுவராக்கியவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் அவர்களதுவேண்டுதலாகும்.
இந்த நெருக்கடிகளுக்கு தீர்வுகாணாமல் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வர அவதிப்படுதில் தப்பில்லை என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால்,என்ன நல்ல திருத்தம் வந்தாலும்,அதனை மக்களுக்காக நடைமுறைப்படுத்த ‘லீகுவான் யூ’அல்லது‘மஹதீர் மொகமட் போல’ஒரு ஆட்சியாளர் இலங்கையில் உருவாகாத வரையில்,திருத்தங்களின அர்த்தம் தான் என்ன?
என்னதிருத்தம் கொண்டு வரப்பட்டாலும் இந்த ராஜபக்சக்களும் , விக்கிரமசிங்கங்களும் , பிரேமதாசக்களும் , சிறிசேனக்களும் , அனுரகுமாரக்களும் சிலவேளை சம்பிக்கக்களும் தான் இனியும் இந்த தேசத்தை ஆளப் போகின்றார்கள் என்றால் , இந்தக் குட்டையில் ஊறிய மட்டைகள் தான் மாறிமாறி அமைச்சர்களாக இருக்கப் போகின்றார்கள் என்றால் , என்னதிருத்தம் கொண்டுவந்தும் அதனால் நாட்டு மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகின்றது?
உண்மையாகச் சொன்னால், இலங்கைச் சூழலில் முதலில் திருத்த வேண்டியது அரசியலமைப்பையோசட்ட ஏற்பாடுகளை அல்ல.
ஆட்சியாளர்களையும் , அதிகாரத்திற்குவரக் காத்திருப்பவர்களையுமே திருத்த வேண்டும். அது நடக்கும் வரையாப்பில் 210 திருத்தங்களை கொண்டு வந்தாலும் ,எந்தப் பலனும் கிடைக்காது.