2026 ஆம் ஆண்டின் பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்தும் திட்டத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசாங்கம் விலகியுள்ளது.
இப்போட்டிகளை நடத்துவதற்கான செலவுகளின் அதிகரிப்பே இதற்குக் காரணம் எனத் தெரிவி;;க்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகளை நடத்துவதற்கு 2 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் செலவாகும்என ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டிருந்ததாகவும் ஆனால் அது புதிய மதிப்பீடுகளின்படி, 3 மடங்காக அதிகரித்துள்ளது எனவும் விக்டோரியா மாநில பிரதமர் டேனியல் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். இது மிக அதிகமான செலவாகும் என அவர் கூறியுள்ளார்.
‘நான் எனது பணியில் பல கடினமான தீர்மானங்களை, மிகக் கடினமான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளேன். இது அவற்றில் ஒன்றல்ல’ எனவும் பிரதமர் அண்ட்ரூஸ் கூறினார்.
இத்தீர்மானமானது விக்டோரியா மாநிலத்துக்கு பெரும் அவமானம் என விக்டோரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜோன் பெசுட்டோ கூறியுள்ளார்.
விக்டோரியா அரசாங்கத்தின் இத்தீர்மானத்தினால் தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், ஆனால், தீர்வொன்றைக் காண்பதற்கு உறுதிபூண்டுள்ளதாவும் பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.