ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான தொழில்முறை கிரிக்கெட் தொடரான லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கானது அடுத்த வருடம் ஜனவரியில் ஓமனில் அமைந்துள்ள அல் அமெரத் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
தொடக்கப் பதிப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பிற கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் இந்தியா, ஆசியா லயன்ஸ் மற்றும் உலகின் பிற நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியா லயன்ஸ் அணியில் சோயிப் அக்தர், ஷாஹித் அப்ரிடி, சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், ரொமேஷ் கலுவிதாரண, திலகரத்ன டில்ஷான், அசார் மஹ்மூத், உபுல் தரங்கா, மிஸ்பா உல் ஹக், மொஹமட் ஹபீஸ், ஷோயிப் மாலிக், மொஹமட் யூசப், உமர் குல், யுனிஸ் கான் மற்றும் அஷ்கர் ஆப்கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியில் பதவி வகித்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் இதன் ஆணையாளராக சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]