கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் வேல்ஸ் அணியை 2:0 கோல்களால் ஈரான் அணி வென்றது.
குழு பி இலுள்ள அணிகளுக்கு இடையிலான இப்போடடி கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள அஹ்மத் பின் அலி அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் இடைவேளை வரை எந்தவொரு அணியும் கோல் புகுத்தவில்லை.
முதல் சிவப்பு அட்டை
இப்போட்டியின் 86 ஆவது நிமிடத்தில் வேல்ஸ் வெய்ன் ஹென்னஸி சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
கத்தார் 2022 உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் வீரர் இவராவார்.
வெய்ன் ஹென்னஸி வெளியேறியதால் 10 பேருடன் விளையாடும் நிலைக்கு வேல்ஸ் அணி தள்ளப்பட்டது. டெனி வர்ரட் அவ்வணியின் புதிய கோல் காப்பாளராக பணியாற்றினர்.
அதன் பின்னர் ஈரானிய 2 கோல்களை அடித்தது.
உபாதை ஈடு நேரத்தின் 8 ஆவது நிமிடத்தில் ஈரானின் ரூபே செஸ்மி முதலாவது கோலைப் புகுத்தினார். மேலும் 3 நிமிடங்கள் கடந்த நிலையில், ஈரானின் ரமின் ரெஸாயன் 2 ஆவது கோலை புகுத்தினார்.
குழு பி இல் ஈரானிய அணி தற்போது இங்கிலாந்துக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது.