அரசியலமைப்பின் படி ஐக்கிய தேசிய முன்னணிக்கு 2020 ஆகும் வரையில் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் அமைச்சர் வஜிர அபேவர்தன காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் படிபாராளுமன்றத்தில் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சி ஐக்கிய தேசிய முன்னணி ஆகும். என்னதான் இருந்தாலும், அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரம் ஐக்கிய தேசிய முன்னணியிடமே உள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் முழுமையான சக்தி இக்கட்சியிடம் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.