2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கும் வீட்டு வரி ஒழிப்பு, 2020 ஆம் ஆண்டில் முழுதாக முற்றுப்பெறும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகி வந்த இந்த விடயம் தற்போது ஒரு நிலையான முடிவுக்கு வந்துள்ளது. நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கும் போது, ‘பிரெஞ்சு குடிமக்களுக்கான வீட்டு மனைகளுக்கு விதிக்கப்படும் வரி 2018 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் இருந்து அகற்றப்பட்டு வரும். வரும் 2020 ஆண்டுக்குள் இந்த வரி முற்றாக ஒழிக்கப்பட்டுவிடும்!’ என குறிப்பிட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பட்ஜெட்டில் முதற்கட்டமாக இந்த வரிக்குறைக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த வரிக்குறைப்பு, பொருளாதாரத்திலும், சுற்றுச்சூழல் அமைப்பிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.