ஸ்ரீலங்கா டெலிகொம் 31 டிசம்பர் 2018 இல் முடிவுற்ற ஆண்டிறுதிக்கான தனது நிதிநிலை செயல்திறன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. SLT உடமைக்கம்பனி மற்றும், 9 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட கைபேசி துணை நிறவனம் மொபிடெல் (தனியார்) லிமிடெட், உள்ளடங்களாக எட்டு துணை நிறுவனங்கள் இந்த குழுமத்தில் உள்ளடங்கும்.
மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படட் காலத்தில், ஈர்க்கத்தக்க 7.53% வளர்ச்சியுடன் 81.44 பில்லியன் ரூபா வருமானத்தை குழுமம் பதிவுசெய்துள்ளது. இந்த வளர்ச்சி அனைத்து துறைகளிலும் இருந்தபோதும், மொபைல் செயல்பாடுகளுடன் FTTH, IP TV மற்றும் தரவுகள் தொடர்பாக சேவைகள், தொழில் முயற்சி மற்றும் கேரியர் தொடர்பான வர்த்தகங்கள் மூலம் அதிகம் உந்துதலை பெற்றிருந்தது. உலகளாவிய போக்கை புரிந்துகொண்ட குழுமம் தற்போது தரவு தொடர்பான உற்பத்திகளில் அதிகம் அவதானம் செலுத்துகிறது.
மீளாய்வுக்கு உட்படட்ட ஆண்டு காலத்தில் 12.66% ஆண்டு வளர்ச்சியுடன் 36.64 பில்லியன் ரூபா மொத்த இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக குழும அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.58% ஈர்க்கத்தக்க வளர்ச்சியுடன் 2018 ஆம் ஆண்டுக்கான குழுமத்தின் வரிக்கு பின்னரான நிகர இலாபம் 4.95 பில்லியன் ரூபாவாக அறிக்கையிடப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி இழப்பினால் 1.81 பில்லியன் ரூபா எதிர்மறை தாக்கம் இருந்த போதும் வருவாயில் ஏற்புடைய வளர்ச்சியுடன் இணைந்த செயற்பாட்டு; செலவுகளின் சிறந்த முகாமைத்துவம் காரணமாக குழுமத்தினால் இலாபத்தின் வலுவான வளர்ச்சியை பதிவு செய்ய முடிந்துள்ளது. முந்தைய ஆண்டின் 28.00% உடன் ஒப்பிடுகையில் குழுமத்தின் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தீர்ப்புக்கு முந்தைய வருவாய் (EBITDA) 31.38மூ ஆக அறிக்கையிடப்பட்டிருந்தது.
குழும தலைவர் திரு குமாரசிங்க சிறிசேன கூறியதாவது, “சவால்களுக்கு மத்தியில் ஸ்ரீலாங்கா டெலிகொம் ஒவ்வொரு ஆண்டும் மெம்மேலும் வலுவாக முன்னேறி வருகிறது. குழுமத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை அதேபோன்று குழுமத்தின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் என்ற அந்தஸ்த்துக்கு இது சாட்சியமாக உள்ளது. நிலையான எதிர்காலம் ஒன்றுக்கான செயற்பாடுகள், குறிப்பாக ஒரு டிஜிட்டல் சேவை வழங்குநராக மூலோபாய ரீதியிலான மாற்றதத்தின் ஊடாக எதிர்வரும் ஆண்டுகளில் ஒரு கணிசமான வளர்ச்சியை பார்க்க முடியும் என்று நான் உறுதியாக உள்ளேன்” என்றார்.
மீளாய்வுக்கு உட்படட் ஆண்டில் நிறுவன அளவில் 47.39 பில்லியன் ரூபா வருவாயை கொண்டிருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டது போல், கேரியர் தொடர்பான மற்றும் தொழில் முயற்சி வர்த்தகங்கள் உடன் FTTH, IP TVமற்றும் தரவுகளுடன் தொடர்பான ஒன்றிணைந்த சேவைகள் இந்த அளவு வருவாய்க்கு அதிகம் உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. 6.00% ஆண்டு வளர்ச்சியுடன் நிறுவனத்தின் மொத்த இலாபம் 19.13 பில்லியன் ரூபாவாக பதிவாகி இருந்தது. நிறுவனத்தின் வரிக்கு பின்னரான நிகர இலாபம் 33.47% ஆண்டு வளர்ச்சியுடன் 1.91 பில்லியன் ரூபாவாக பதிவிடப்பட்டுள்ளது. 1.20 பில்லியன் ரூபா அந்நிய செலாவணி இழப்பு இலாபத்தில் அதிகளவு தாக்கம் செலுத்துவதாக இருந்தது. இருப்பினும், வருமான அதிகரிப்பு மற்றும் சிறந்த செயற்பாட்டு செலவு முகாமைத்துவத்தினூடாக செயற்பாட்டு; இலாபத்தினை அதிகரிக்க முடிந்துள்ளது. அந்நியச் செலாவணி இடர ;முகாமைத்துவ மூலோபயத்தினூடாக எதிர்கால செலாவணி இழப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டின் 25.55% இலிருந்து 28.40% க்கு நிறுவனத்தின் EBITDA அளவு உயர்வடைந்தமைக்கு, வருமான அதிகரிப்புடன், குறைந்தளவிலான செலவு அதிகரிப்புமே பங்களித்துள்ளன.
ஒரு வலுவான கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள் என்ற வகையில் சவால்மிக்க சந்தை நிலவரம் மற்றும் எமது திறனின் உச்சத்திற்கு எமது வளங்களை கையாள்வதற்கு நாம் அறிவுடனும் தயாராகவும் இருத்தல் வேண்டும். ஒரு நெகிழ்திறன் குழுமமாக SLT இருப்பதை இட்டு நான் பெருமை அடைகிறேன். பரும அளவுகளை எமது இலக்கங்கள் பேசுகின்றன என்று உடைமை கம்பனியின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு கித்தி பெரேரா தெரிவித்தார்.
தலைமை செயற்பாட்டு அதிகாரி பிரியன்த பெர்னாண்டஸ் கூறியதாவது, “செயற்பாடுகளின் மறுகட்டமைப்பு மூலம் எமது நாடுதழுவிய பிரசன்னம் பலப்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் திருப்தி மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை அதிகரிப்பதற்கு டிஜிட்டல் அடிப்படையிலான உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு எமது டிஜிட்டல் மாற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பன்முகத்தன்மை செறிவூட்டப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்த அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயற்பட நாம் மூலோபாய ரீதியில் அவதானம் கொண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.