இந்த ஆண்டிற்கான யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் பரிசு தொகையை அதிகரித்து அமெரிக்க டென்னிஸ் சங்கத்தால் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் சாம்பியனுக்கு $ 3.8 மில்லியனும், தொடரின் மொத்த பரிசு பணமாக 53 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்க டென்னிஸ் அசோசியேஷன் வெளியிட்ட செய்தியில்: ஆண்கள் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவில் வெற்றிபெறும் அணிக்கு 700,000 டாலராகவும், தொடரில் தகுதி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தமாக 3 மில்லியன் மேல் பரிசு இருக்கும் என கூறியது.
கடந்த ஆண்டு தொடரின் மொத்த பரிசு தொகையாக $ 50.4 மில்லியனாக இருந்தது. தற்போது 2.6 மில்லியன் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2013 யுஎஸ் ஓபன் பரிசுப் பணத்தை விட 57 சதவீதம் அதிகரித்துள்ளது என்று யுஎஸ்ஏஏ தெரிவித்துள்ளது.