2018 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார தினம் இலங்கையில் நடைபெறவுள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்ற 142 உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்று குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகளாவிய சுகாதார பாதுகாப்பு (Universal Health Coverage) என்ற தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான சுகாதார தினம் நடைபெறவுள்ளது.
இதேவேளை இலங்கை சுதந்திரம் அடைந்து 70 வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதையிட்டு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ராஸ் அதனோம் ஜிஹெப்ரேயெஸஸ் Dr.Tedros Adhanom Ghebreyesus தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மக்களுக்கான இலவச சுகாதாரம் தொடர்பில் நீண்டகால வரலாற்றை கொண்டு இருப்பதாகவும் சுகாதார தினத்தை நடத்துவதற்கு இலங்கையே பொருத்தமான இடம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை உலக சுகாதார தினத்தை நடத்துவதற்கு இலங்கையை தெரிவு செய்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.