2017-ல் கனடிய பொருளாதார வளர்சியில் முன்னணி வகிக்கும் மாகாணம்?
அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் கனடிய மாகாணம் எது என்ற வினா எழுந்துள்ளது.
மொன்றியல் வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அதன் BMO Blue Book 2016 மற்றும் 2017ல் மாகாண பொருளாதாரம் துல்லியமாக எவ்வளவு வளர்ச்சி காட்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா சகல பொருளாதாரத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் கூடி இந்த வருடம் 3சதவிகிதமும் அடுத்த வருடம்2.5சதவிகிதமும் அதிகரித்து உயர் நிலையை அடையும் என எதிர்பார்க்கின்றது.
வீடுகள் மற்றும் நுகர்வோர் செலவினங்களினால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வளர்ச்சி அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
ஆனால் TD-வங்கியின் கதை வேறு மாதிரியானதாக உள்ளது.
கடந்த வாரம் வங்கி வெளியிட்ட அறிக்கையில் எண்ணெய் உற்பத்தி மாகாணம் அடுத்த வருடம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சதவிகித வளர்ச்சியை மிஞ்சி 2.2பொருளாதார வளர்ச்சி காட்டும் என தெரிவிக்கின்றது.
மற்றய மாகாணங்களை விட அல்பேர்ட்டாவிற்கு ஒரு சிறந்த திருப்திகரமான எதிர்காலம் இருப்பதாக ஒரு வங்கி தெளிவாக பார்க்கின்றது.