ரொறொன்ரோ உட்பட்ட ஒன்ராறியோவின் தெற்கின் பல பாகங்களிற்கு வெப்ப எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதலாவது வெப்ப எச்சரிக்கை இதுவாகும்.
வெப்பநிலை ஞாயிற்றுகிழமை 31 C-ஆக எதிர்பார்க்கப்படுவதுடன் இரவு 20 C ஆக திங்கள்கிழமை வரை தொடரும் என கனடா சுற்று சூழல் அறிவிக்கின்றது.
இந்த நிலைமை செவ்வாய்கிழமையும் தொடரலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வாரத்தின் நடுப்பகுதியில் குறையும்.
திங்கள்கிழமை வெப்பநிலை ஆக கூடியதாக 33 C, ஆக உயரக்கூடும். செவ்வாய்கிழமை 25 C ஆக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த இரு நாட்களிலும் மழை சாரல்களும் ஏற்படும் சாத்தியக்கூறுகள் 30-சதவிகிதம் காணப்படுகின்றது.
இக்காலப்பகுதியில் நிறைய தண்ணீர் குடிக்குமாறும் குளிர்மையான பகுதிகளை நாடுமாறும் அத்துடன் செல்லப்பிராணிகள் அல்லது மனிதர்களை தரித்து நிற்கும் வாகனங்களில் விடவேண்டாம் எனவும் கனடா சுற்று சூழல் அறிவுறுத்துகின்றது. அது மட்டுமன்றி அதி உயர் ஊதா குறியீடு காணப்படும். சன்ஸ்கிரீனை மறக்க வேண்டாம்!
சிறுவர்கள், கர்ப்பினி பெண்கள், வயதானவர்கள், வெளிப்புறங்களில் பணியாற்றுபவர்கள் அல்லது உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் நீடித்த நோய் வாய்பட்டவர்களிற்கு அதி உயர் வெப்பநிலை ஆபத்தானது. வெப்பத்தை தவிர்த்த நிழலான பகுதிகளை நாடுவது சிறந்தது.