2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகவும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியடைந்தது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குமார் சங்கக்காரவும் இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற வேண்டுகோளை இப்போது விடுத்துள்ளார்.
நானும் அதையே வலியுறுத்துகிறேன். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி எப்படி தோற்றது, ஏன் அப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்துங்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.