2009இல் பிரபாகரன் மறைக்கப்பட்டாரா ஒழிக்கப்பட்டாரா? – சிக்கலான தருணத்தில் மைத்திரி – மஹிந்த!
உண்மையில் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன…? என்ற பல வகையான கேள்விகளுக்கு இன்று வரை பதில் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளாகவே காணப்பட்டு வருகின்றது.
சரணடைந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொல்லுமாறும், வெள்ளைக்கொடி பிடித்துவந்தவர்களையும் விட்டு விடாமல் சுட வேண்டும் எனவும் இராணுவத்திற்குஉத்தரவிடப்பட்டிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறினார்.
அதற்காக போர்க் குற்ற இரகசியங்களை வெளிப்படுத்தியதாக தெரிவித்து சரத் பொன்சேகாதண்டிக்கவும் பட்டிருந்தார் என்பது அறிந்ததே.
இதேவேளை வெள்ளைக்கொடியேந்திக் கொண்டு எவரும் வரவில்லை. அவ்வாறுவெள்ளைக்கொடியேந்தி வந்தார்கள் என்று கூறினால் அதை நாம் ஏற்கப்போவதில்லை என மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தற்போது தெரிவித்துள்ளார்.
அப்படி என்றால் பொன்சேகாவை ஏன் தண்டிக்க வேண்டும்? தனிப்பட்ட இலாபத்திற்காகவே அவர் தண்டிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? இன்னொருவர் இட்ட உத்தரவையே தான் நிறைவேற்றியதாக பொன்சேகா கூறினார்.
இதன்போது அந்த உத்தரவை இட்ட அந்த மர்ம நபர் யார்? உத்தரவை இட்டவர் தண்டிக்கப்படவோ அல்லது விசாரணை செய்யப்படவோ இல்லை.
அவ்வாறெனின் பொன்சேகா பொய்யான காரணத்திற்காகவே தண்டிக்கப்பட்டார் என்றே ஐயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சந்தேகம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவரே பொன்சேகா. அவரைப்பற்றி அவதூறான கருத்துகளை அவரின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து சேவையாற்றிய கமால் குணரட்ண தற்போது வெளிப்படுத்தி வருகின்றார் என்றால் அதுவும் ஒரு வகையான குற்றமே.
இதன்போது அவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதும் அவசியம். ஆனால் அவ்வாறு இடம் பெறவில்லை இதற்கு பின்னணியில் இருப்பவர் யார்?
மேலும் யுத்த நிலவரங்களைப் பற்றியே இவரும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றார். ஒரு வகையில் அதுவும் போர் இரகசியத்தை வெளிப்படுத்தும் செயலே.
இதன்போது கமாலை காப்பாற்றுவது யார்? அல்லது அவர் வெறும் அம்பாக இருந்து செயற்பட்டு வருகின்றார் என்றால் வில் யார்? எய்தவர் யார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளதாக அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் மைத்திரி “இரகசியத்தை வெளியிடுவேன்” என்று பகிரங்கமாக கூறியதன் பின்னரே நாட்டில் விடுதலைப்புலிகள் பற்றியும், பிரபாகரனின் மரணம் தொடர்பிலும் பல்வேறுபட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதும் உண்மையே.
இதேவேளை, யுத்த இரகசியங்கள் என்னிடம் இருக்கின்றது என சிலர் நினைத்தால், அவர்கள் அதை தெரிந்து கொள்ள என்னுடன் கல்லறைக்குத் தான் வர வேண்டும் என்றும் கமால் குணரத்ன கூறியுள்ளார். அப்படி அவர் மரணம் வரை கொண்டு செல்லும் இரகசியம் என்ன?
இதன் அடிப்படையில் சிந்திக்கும் போது இறுதியுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்படவில்லை, ஆனால் போர்க் குற்றம் இடம் பெற்றது, விடுதலைப்புலிகள் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டார்கள், போன்றவற்றை மறைமுகமாக அவர் கூற முற்படுவதாகவும், அதேசமயம் அதனை அவர் கூறினால் அவர் தண்டனை பெற வேண்டிய நிலை உண்டாகும்.
அதனால் யாராவது கூறி அதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் முயல்வதாகவும் கருத்துகள் கூறப்படுகின்றது.
இல்லாவிடின் தண்டனையும் வழங்கப்பட்டு முடிந்த விவகாரங்களை அவர் தற்போது வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் விடுதலைப்புலிகள் தொடர்பில் அதிகளவாக அவர் பேச வேண்டிய கட்டாயமும் இல்லை.
மேலும் நாடு தற்போது செல்கின்ற பாதையில் பலிவாங்கும் படலங்களே அதிகமாக காணப்பட்டு வருகின்றது. அரசியல் இலாபங்களுக்காக நீயா நானா எனும் போட்டி நிலவியுள்ள சூழ்நிலையில், விடுதலைப் புலிகள் மீதான போர் குற்றங்கள் வெளிவந்தால் யாருக்கு இலாபம் என்ற ரீதியில் பார்க்க வேண்டியுள்ளது.
மைத்திரியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு பொதுமக்களின் ஆதரவு அவசியம், அதேபோல் அரசியலில் தடுமாறிப்போயுள்ள கடந்த கால இலங்கையின் மன்னனாக வர்ணிக்கபட்ட மஹிந்த குற்றங்களில் இருந்து தப்பிக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
இதன்போது முழு நாட்டினையும் ஒருவருக்கொருவர் தம் பக்கம் ஈர்த்துகொள்ள அனைவருக்கும் இருக்கும் ஒரே விடயம் விடுதலைப்புலிகளே அதற்காக நாசூக்காக உண்மைகள் தற்போது வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன்போது யார் மீது போர் குற்றம் திரும்பும், யார் தண்டிக்கப்படுவார்கள்? நிரந்தர ஆட்சி அமைக்கப்போவது யார்? இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? பிரபாகரனின் மரணம் ஏற்படுத்திய சர்ச்சை போன்ற அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கொடுக்கப்படும்.
அதேவேளை இதனை யார் வெளிப்படுத்தப்போவது என்ற எதிர்ப்பார்ப்பே தற்போதுகாணப்படுவதாக அரசியல் அவதானிகள் கூறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.