2000 ரூபாய் நோட்டு கூட செல்லாமல் போகலாம்! மோடியின் அடுத்த அதிரடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் புழங்கும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார்.
மேலும், அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி கோபேவில் இந்தியர்களிடம் பேசியதாவது,
இந்த நடவடிக்கை நாட்டை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று. யாருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை அல்ல.
சில குடும்பங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிலர் மருத்துவமனைகளுக்கு சென்று வர வேண்டிய கட்டாயம் உள்ளவர்களாக உள்ளனர்.
இவர்களுக்கெல்லாம் மிகுந்த சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் அவர்கள் எனது முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.
இதே போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பதுக்குவதற்கு எளிதாக இருக்கும் என்றும் இதனால் எதிர்காலத்திலும் கருப்பு பண பிரச்சனை தொடரும் என எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி,
டிசம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் இதே போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என உறுதியாக சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
After 30th December, there’s no guarantee that a similar scheme won’t be rolled out: PM @narendramodi on curbing #blackmoney