200 நாடுகள் சேர்ந்து செய்த ஒப்பந்தம் என்ன?
உலகின் காலநிலையை பாதுகாக்கும் நோக்கத்தில் சுமார் 200 நாடுகள் சேர்ந்து பைங்குடில் (Green House) வாயுக்கள் வெளியிடுவதை மட்டுப்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளன.
நவீன உலகில் அனைத்து நாடுகளுமே தங்களுடைய சொகுசான வாழ்க்கைக்காக நவீன சாதனங்களை உருவாக்கிக் கொண்டு, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி வருகின்றன.
மனிதர்களின் இந்த தவறான நடவடிக்கைகளால் காற்று மண்டலத்தின் இயல்புநிலை மாறுகிறது. அதன் விளைவாக காலநிலை பாதிக்கிறது.
அதனால், ஒரு சீரற்ற காலநிலையால் பூமி பாதிக்கப்படுகிறது. பூமியில் வெப்பநிலை உயர்கிறது. ஓசோன் படலம் பாதிக்கிறது, புயல், பூகம்பம், சுனாமிகள் உருவாகிறது.
இதற்கு முக்கிய காரணமாக கண்டறியப்பட்டிருப்பது. ஹைட்ரொ ப்ளோரா கார்பன் (Hydroflurocarbons- HFC) வாயுதான். இது கார்பன்டை ஆக்ஸைடை விடவும் காலநிலையை பாதிப்பதில் சக்தியானது.
இதை கிரீன் ஹவுஸ் வாயுக்கள் என அழைக்கப்படுகிறது. இந்த வாயுக்கள் இப்போது அதிகம் வளிமண்டலத்தில் சேர்வதற்கு காரணம் குளிரூட்டிகள் (AC), குளிர்சாதன பெட்டிகள் (Refrigerators) அதிகம் பயன்படுத்துவதன் விளைவுதான்.
இந்த குளிர் சாதனங்களின் பயன்பாட்டை குறைத்து, வளிமண்டலத்தில் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் சேர்வதை தடுப்பதற்கு இந்த 200 நாடுகள் இன்று சனிக்கிழமை ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த வாயுக்களை வெளியிடுவதில் இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்கா 2019 ல் துவங்குகிறது. முதலிடத்தில் உள்ள சீனா மற்றும் 100 வளர்ச்சியடைந்த நாடுகள் 2024 ல் துவங்குகின்றன.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சில வளைகுடா நாடுகள் 2019ல் துவங்குகின்றன.
85 சதவீத வளர்ச்சியடைந்த நாடுகள் 2024 ல் குறைப்பதற்கான நடவடிக்கையில் இறங்குகின்றன.
இது சுற்றுச்சூழலை தூய்மையாக்குவதில் குறிப்பிடத்தக்க சாதனையாக மாறுவது உறுதி என, சுற்றுச்சூழல் புலனாய்வு ஏஜெசியுடன் சேர்ந்து பிரிட்டன் காலநிலை பிரச்சார தலைவரான கிளேர் பெர்ரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.