கனடிய பாராளுமன்றத்திற்கு எதிராக அமைந்துள்ள முன்னாள் யு.எஸ்.தூதரக கட்டிடம் 20-வருடங்களாக வெற்றிடமாக இருந்துள்ளது.
அமைதி கோபுரத்தின் நிழலாக விழங்கும் இக்கட்டிடம் கனடிய ரியல் எஸ்டேட்டினால் மிகவும் விரும்ப பட்ட துண்டுகளில் ஒன்றாக அமைகின்றது.
அமெரிக்க தூதரகமாக விளங்கிய இது பழங்குடியினரான- இனுயிட், மெட்டிஸ் மற்றும் முதல் தேசங்களின்-சமூகங்களிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இடமாக அமைய உள்ளதென தெரிய வருகின்றது.
இந்த கூட்டாட்சியின் பாரம்பரிய கட்டிடம் எப்படியான காரணங்களிற்காக உபயோகப்படப்போவதென்பதை அரச அதிகாரிகள் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நகரத்தின் கட்டிடக்கலை ரத்தினமாக பலராலும் கருதப்பட்டு வரும் ஒன்றாகும்.
இக்கட்டிடம் குறித்த முறையான அறிவிப்பு ஒன்றை அரச அதிகாரிகள் யூன் மாத இறுதிப்பகுதியில் அறிவிப்பார்கள்.
எப்படியான முக்கிய காரணத்திற்கு இக்கட்டிடம் ஏற்றதென தீர்மானிக்க உதவும் பொருட்டு பழங்குடி சமுதாயத்தினருடன் கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jean Chrétien பதவிக் காலத்தில் இக்கட்டிடம் ஒரு படத்தொகுதிகளின் கலரியாக உருமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் Stephen Harper பதவிக்கு வந்ததும் இத்திட்டம் கைவிடப்பட்டது.
ஜஸ்ரின் ட்ரூடோவின் அரசாங்கம் இதனை பழங்குடி மக்களிற்காக அர்ப்பணிக்க முன்வந்துள்ளது. சந்தேகத்திற்கிடமின்றி இது ஒரு அரசியல் அறிக்கையாகலாம் எனவும் கூறப்படுகின்றது.
பழங்குடியினருடன் ஒரு புதிய உறவை ஏற்படுத்த ட்ரூடோ முன்வந்திருக்கலாம்.தனது உறுதி மொழிகளை-காணாமல் போன மற்றும் இறந்து போன பழங்குடி பெண்கள் மற்றும் இளம் பெண்கள் குறித்த விசாரனையின் தாமதம் உட்பட்ட- நிறைவேற்ற திண்டாடுகின்ற வேளையில் இப்புதிய திட்டம் உதவலாம் என அறியப்படுகின்றது.
இக்கட்டிடம் கனடிய பாராளுமன்றம் மற்றும் பிரதம மந்திரியின் காரியாலம் ஆகியன அமைந்திருக்கும் வீதிக்கு எதிராக அமைந்துள்ளது.