பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று புது டெல்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பிரதமர் தனது இந்திய விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளார். பிரதமருடன் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, அர்ஜூன ரணதுங்க, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் செல்கின்றனர்.