இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 183, 2-வது இன்னிங்சில் 386 ரன்னுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.