கனடாவை அதிர வைத்த 3 கொலைகள்
கனடா நாட்டில் சிறுவன் உள்பட மூன்று பேரைக் கொடூரமாக கொலை செய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கல்கேரி நகரை சேர்ந்த Douglas Garland(57) என்ற நபருக்கு தான் இந்த தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக இவருக்கும் இவருடைய குடும்ப உறுப்பினர்களான Alvin மற்றும் Kathy Liknes மற்றும் இவர்களுடைய பேரனான 5 வயதான Nathan O’Brien ஆகிய மூவரையும் கொலை செய்ய டக்லஸ் திட்டம் தீட்டியுள்ளார்.
இதனை செயல்படுத்தும் விதமாக கடந்த 2014-ம் ஆண்டு யூன் மாதம் வீட்டிற்கு சென்றபோது முதியவர்கள் இருவரையும் கொடூரமாக தாக்கி கொன்றுள்ளார்.
பின்னர், சிறுவன் எனவும் பார்க்காமல் இரக்கமின்றி அவனை சித்ரவதை செய்துக் கொலை செய்துள்ளார்.
மூவரும் உயிரிழந்துள்ளதை உறுதி செய்த அவர் சடலங்களை தன்னுடைய வாகனத்தில் ஏற்றுக்கொண்டு சென்றுள்ளார்.
பின்னர், மூவரின் சடலங்களையும் அடையாளம் தெரியாதவாறு துண்டு துண்டாக வெட்டி ஆங்காங்கே வீசி மறைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
ஆனால், பொலிசாரின் தீவிர விசாரணையில் டக்லஸ் தான் இந்த மூன்று கொலைகளையும் செய்தவர் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது, இதுபோன்ற ஒரு கொடூரமான திட்டமிட்ட கொலையை தனது அனுபவத்தில் பார்த்தது இல்லை என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
பின்னர், குற்றவாளி மீதான அனைத்து குற்றங்களும் நிரூபனம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், அடுத்த 75 ஆண்டுகளுக்கு டக்லஸ் பரோலில் கூட வெளியில் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.