தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் 1983 ஜூலை தமிழின படுகொலையின் 34வது ஆண்டு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது.
பிரித்தானியாவின் பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக 23/07/2017 மாலை 5.00 மணி தொடக்கம் பி.ப 7.00 மணிவரை கறுப்பு ஜூலை துயரத்தின் நினைவு வணக்க நிகழ்வுகள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கு படுத்தலுடன் தமிழ் மக்களால் நினைவுகூரப்பட்டது. முன்னதாக பிரித்தானியக்கொடி மற்றும் தமிழீழ தேசியக்கொடி என்பன ஏற்றப்பட்டு ஆரம்பமான நிகழ்வில் செயற்பாட்டாளர்களின் பாடல்கள் கவிதைகள் மற்றும் எழுச்சி உரைகள் என்பன இடம்பெற்றன. இன் நிகழ்வுகளில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.