உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 18 மாதங்களாக ஏறக்குறைய 77 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகம் கல்வி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தனது சமூகவலைத்தளங்களை 18 மணிநேரங்களுக்கு முடக்கி #கூடிய விரைவில் தனிப்பட்ட கற்றலுக்காக பாடசாலைகளை மீண்டும் திறக்கவும் என உலகிற்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளது.
மொத்த மாணவர் சனத்தொகையில் 7.5 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 117 மில்லியன் மாணவர்கள் 18 நாடுகளில் முழுமையாக பாடசாலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓரளவிற்கு பாடசாலைகள் திறக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 52 லிருந்து 41 ஆக குறைந்துள்ளது. ஐந்து நாடுகளில் மொத்தம் 18 மாத காலத்திற்கு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் 77 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக பாடசாலைகள் மூடப்பட்ட அனைத்து நாடுகளிலும் நாடுகளிலும், இணையவழி கல்வி, அச்சிடப்பட்ட குறிப்புகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தை பொறுத்தவரை, ஒவ்வொரு சிறுவர்களின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு பாடசாலைக்கு செல்லும் உரிமை முதன்மையாக உள்ளது.
இன்னும் பல நாடுகளில், பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும், அதே நேரத்தில் உணவகங்கள், வரவேற்புரைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் சமூகம் ஒன்று கூடல் தொடர்ந்து நடைபெறுகின்றன, ” என ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தலைமுறை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், அவர்களின் கல்விக்கு எந்த தடங்கல்களையும் தாங்க முடியாது” என அது மேலும் கூறியது.
இந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட யுனெஸ்கோவின் அறிக்கையில், 117 நாடுகளில் பாடசாலைகள் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன, 539 மில்லியன் மாணவர்கள் ஆரம்ப நிலை முதல் இரண்டாம் நிலை வரை மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
இது உலகெங்கிலும் உள்ள மொத்த மாணவர் சனத்தொகையில் 35 சதவிகிதத்தை பிரதிபலிக்கிறது.
செப்டெம்பர் 2020 இல் பாடசாலைக்கு திரும்பிய 16 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது, 94 நாடுகளில் பாடசாலைகள் மட்டுமே முழுமையாக அல்லது பகுதியளவு திறந்திருந்தன.
யுனெஸ்கோ மற்றும் அதன் மற்ற அமைப்புகள் பாடசாலைகள் பாதுகாப்பாக மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்,
முழு மூடுதலையும் கடைசி முயற்சியாக பயன்படுத்துமாறு வலியுறுத்துகின்றனர்.