2021 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 18 பேர் தேசிய வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதிய ஒப்பந்தம் 05 மாத காலத்திற்கு செல்லுபடியாவதுடன், 2021 டிசம்பர் 31 அன்று முடிவடையும்.
இலங்கை கிரிக்கட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் இணைந்து இலங்கை கிரிக்கெட்டால் வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து எந்தவித விலகலும் இல்லாமல் வீரர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
செயல்திறன், உடற்தகுதி, தலைமை/சீனியாரிட்டி, தொழில்முறை/நடத்தை விதி மற்றும் எதிர்கால/தழுவல் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்பட்டனர்.
ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு, தனிநபர்களுக்கான அளவுகோல்கள் மற்றும் புள்ளிகள் ஒதுக்கீடு ஆகியவை வீரர்களிடையே பகிரப்பட்டன.
ஒப்பந்தம் வழங்கப்பட்ட வீரர்களில் அஞ்சலோ மெத்யூஸ் பரிசீலிக்கப்படவில்லை. அதே நேரத்தில் தனுஷ்கா குணதிலகா, நிரோஷன் டிக்வெல்லா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இசுரு உதானாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
தேசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வீரர்கள்
- தனஞ்சய டிசில்வா
- குசல் பெரேரா
- திமுத் கருணாரத்ன
- சுரங்க லக்மால்
- தசூன் சானக்க
- வனிந்து ஹசரங்க
- லசித் எம்புல்தெனிய
- பதும் நிஷாங்க
- லஹிரு திரிமான்ன
- துஷ்மந்த சமீர
- தினேஷ் சந்திமால்
- லக்ஷான் சந்தகான்
- விஷ்வ பெர்னாண்டோ
- ஓசத பெர்னாண்டோ
- ரொமேஸ் மெண்டீஸ்
- லஹிரு குமார
- அசென் பண்டார
- அகில தனஞ்சய