அதன்படி இப்படத்திற்கு பின்னர் பல வித்தியாசமான கதைகள் கொண்ட படங்கள் வெளியாகி வரவேற்பை பெறத் தொடங்கின. தற்போதைய சூழலை பொறுத்தவரை, சினிமா ரசிகர்கள் புதுமையை ரசிக்கிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். வசனங்கள் பெறும் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், `ஆளவந்தான்’ படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றியமைத்து மீண்டும் வெளியிட படத்தின் தயாரிப்பாளரான தாணு முடிவு செய்திருக்கிறார். மேலும் நீளம் கருதி குறைக்கப்பட்ட சண்டைக் காட்சிகளும் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சுமார் 500 திரையரங்குகளில் வெளியிட தாணு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் ரவீனா தண்டன், மனீஷா கொய்ராலா, வல்லப் வியாஸ், கோலாபுடி மாருதி ராவ், சரத் பாபு, அனு ஹாசன், ரியாஸ் கான் என பலர் நடித்திருந்தனர்.