கடந்த 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமெரிக்காவின் மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், முதலாவதாக ஐந்து பேருக்கான மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் சட்ட மா அதிபர் பில் பார் தெரிவித்துள்ளார்.
பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி டிரம்ப் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சட்ட மா அதிபர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் கூறியுள்ளார்.
இதன்படி, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிறைச்சாலைக்குப் பொறுப்பான நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.