தற்போது இருக்கும் நவீன காலத்தில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தாதவர் எவரும் இல்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அது ஒருபக்கம் இருக்க., செல்போன்கள் மூலம் செல்ஃபி எடுக்கும் மோகம் அனைவரையும் பிடித்துள்ளது.
செல்ஃபி மோகத்தால் 16 வயது சிறுமி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்துள்ளது.
இந்தோனேஷியா நாட்டில் உள்ள அபுர்வோரெஜோ என்கின்ற பகுதியில் ஹயாதி என்ற 16 வயது சிறுமி தனது தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
அப்போது அந்த சிறுமிக்கு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. ஓடும் ரயிலின் பக்கவாட்டில் நின்று செல்ஃபி எடுக்கலாம் என்று தனது தோழிகளை கூட்டி சென்றாள்.
அந்த சிறுமி செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் போது, அவர் தலையில் அணிந்திருந்த துணி ரயிலில் சிக்கியது.
ரயிலின் வேகத்தில் இழுக்கப்பட்டதில், அருகில் இருந்த சிமென்ட் சுவரில் அவரது தலை பலமாக மோதியது.
சிறுமியின் தலையில் ஒரு பகுதி உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமி தற்போது கோமா நிலையில் இருக்கிறார்.
பெற்றோர்களே..! உங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்களை வாங்கி தரவேண்டாம். இனியாவது எச்சரிக்கையாக இருங்கள்..!!