நாட்டில் 16 மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவியுள்ளதாகவும், கடந்த சில வருடங்களாக இது வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
1994 ஆம் ஆண்டு முதல் நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் அனுராதபுரம் உட்பட வடமத்திய மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பதிவாகியுள்ள சிறுநீரக நோயாளர்களில் 95 வீதமானவர்கள் விவசாயத்துடன் தொடர்புடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயினால் முதியோர்களில் 70% மரணங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்த போதிலும், 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இறப்பதற்கான போக்கு காணப்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது.
இதேவேளை இரசாயனப் பாவனையினால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜெனிவாவில் அண்மையில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் அமர்வில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சுகாதார அமைச்சரும் விவசாய அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அந்த அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனுருத்த பதெனிய, பசுமை விவசாயம் தொடர்பான வழிநடத்தல் குழுவின் தலைவர் பேராசிரியர் பிரியந்த யாப்பா மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]