காங்கேசன்துறை கடற்பகுதியில் மிதந்து கிடந்த சுமார் 153 கிலோ கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா தொகை பொதி செய்யப்பட நிலையில் கடலில் போடப்பட்டுள்ளதாகவும் பின்னர் அதனை கரையிலிருந்து எடுத்துச்செல்ல முயற்சித்திருக்கலாம் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மீட்கப்பட்ட கஞ்சா தொகை மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.