151 பயணிகளுடன் சுவரில் மோவிருந்த படகு: நொடியில் தப்பிய தருணம்
Canary Wharf Pier என்ற இடத்தில் அமைந்துள்ள ஆற்றில் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில், 151 சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த அந்த படகின் பின்புறத்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
மேலும், நதியின் பக்கவாட்டில் எழுப்பப்பட்டிருந்த குறுக்குசுவர் மீது மோதுவது போன்று வந்து ஒரு நொடியில் சுதாரித்துக்கொண்ட படகு ஓட்டுநர், கவனமாக படகினை திசை திருப்பியுள்ளார்.
ஆனால், இதன் ஆபத்து அறியாத மக்கள் படகு சவாரியினை சந்தோஷமாக அனுபவித்துக்கொண்டிருந்தனர், ஆனால் படகில் பயணம் செய்த மாலுமிகள், நிலமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்டு படகினை கவனமாக கரை ஒதுக்கியுள்ளனர்.
மேலும், அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். என்ஜினில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக படகில் இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து லண்டன் நதி கிளை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள தகவலில், படகு சவாரி திட்டமிடப்படாமல் மூடப்படுகிறது, இதனால் Canary Wharf Pier இடத்தில் பயணிகள் யாரும் படகு சவாரி செய்வதற்காக காத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.