வடக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தொழில் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 15 கோடி ரூபா நிதி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரின் பொறுப்பற்ற செயலால் திருப்பி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது .
இன்று யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்ற மாதாந்த வடக்கு வட்ட மேசை கலந்துரையாடலில் இந்த விடயம் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது .
பொறுப்பற்று செயற்ப்படும் அரச அதிகாரிகளால் அரசினால் வழங்கப்படும் முக்கிய திட்டங்கள் மக்களுக்கு பூரணமாக வந்து சேராமை தொடர்பில் காரசாரமான விடாங்கள் இடம்பெற்றுள்ளன .கடந்த வருடம் இடம்பெறவேண்டிய இந்த திட்டம் அரச அதிபரின் பொறுப்பற்ற செயலால் திருப்பி அனுப்பப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது .வெறுமனே கட்டடம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிலம் துப்பரவு செய்யப்பட்டதுடன் இந்த திட்டம் மேற்கொண்டு செயற்ப்படுத்த படாமல் நிறுத்தப்பட்டுள்ளது .