பவுன்சர் பந்தால் நிலைகுலைந்து விழுந்த வங்கதேச வீரர்! மைதானத்தில் பரபரப்பு
நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 220 ஓட்டங்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 244 ஓட்டங்களுக்கு சுருண்டது.
வங்கதேச அணி முதல் இன்னிங்சை விளையாடிய போது அந்த அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் பவுன்சர் பந்து தலையில் தாக்கி காயம் அடைந்தார்.
53வது ஓவரில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் பென் ஸ்டோக் வீசிய பந்தை அவர் எதிர்கொண்ட போது பந்து ஹெல்மெட்டை தாக்கியது.
இதனால் அதிர்ச்சியில் அவர் நிலைகுலைந்து கிழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இருப்பினும் இந்த சம்பவத்தால் மைதானத்தில் வீரர்களிடையே சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
பின்னர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய முஷ்பிகுர் ரஹீர் அடுத்த 2 பந்தை சந்தித்து 4 ஓட்டங்களில் வெளியேறினார்.
தற்போது வங்கதேச அணி தனது 2வது இன்னிசை நிதானமாக விளையாடி வருகிறது.