முட்டை விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளது.
முட்டை ஒன்றின் விலையை 7 ரூபாவுக்கும், 10 ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவில் குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பண்ணைகளில் முட்டை ஒன்றை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த விலையை விடவும் அதிக விலைகளுக்கு முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. சகல பொருட்களின் விலைகளும் சற்று குறைவடைந்து வரும் நிலையில், முட்டையை விலை குறைத்து விற்பனை செய்ய முடியும்.
இவ்வாறான நிலையில் வர்த்தகர்கள் முட்டையின் விலையை கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.