தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதியும் நடமாட்டக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கின்ற போதும், மக்களது நடமாட்டத்தை கணிசமாக கட்டுப்படுத்த முடியாத நிலைமை நிலவுகிறது.
நடமாட்டக் கட்டுப்பாட்டின் மூலம் 90 சதவீதமான நடமாட்டத்தை கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் துரதிஸ்ட வசமாக அது சாத்தியமற்றுள்ளது.
குறிப்பாக கொழும்பு நகரில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய துறையைப் போன்று இயக்கப்படுகின்றன.
இவ்வாறானா சூழ்நிலையில், அடுத்தவாரமும் நடமாட்டத் தடையை நீக்க முடியாத நிலைமையே நிலவுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.