இன்று காலை பிரான்ஸ்போர்தோ நோக்கிய வெளியேற்றப் பாதை அருகில், Bègles இல் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 13 வாகனங்கள் சிக்கி உள்ளன. இதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் உயிராபத்தான நிலையில் உள்ளார். பெரும் புகார், மற்றும், வீதியில் படிந்திருந்த பனியின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6h15 அளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், முதலில் இரண்டு சிற்றுந்துகளே மோதிக் கொண்டன. அதன் பின்னர் ஒவ்வொன்றாக 13 வாகனங்கள் விபத்திற்குள்ளாகின என, நெடுஞ்சாலைகளிற்கான CRS படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிராபத்தில் உள்ள 20 வயதுப் பெண்ணொருவர் உடனடியாக போர்தோவின் அரசினர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.