13 வயதில் உடல் ரீதியாக தொல்லை – 40 ஆண்டுக்கு பின்… கனடா பெண் சொல்லும் பகீர் காரணம்…

13 வயதில் உடல் ரீதியாக தொல்லை – 40 ஆண்டுக்கு பின்… கனடா பெண் சொல்லும் பகீர் காரணம்…

தமது உறவினர் 13 வயதில் பலாத்காரம் செய்ததற்கு 40 ஆண்டுகள் கழித்து சென்னை போலீசில் கனடா வவ்வால் ஆராய்ச்சியாளர் புகார் செய்துள்ளார். இதற்கு காரணமே தற்போது 73 வயதாகும் அந்த ‘பெரிய மனிதர்’ காமுகன் இன்னமும் சிறுமிகளிடம் சில்மிஷத்தை காட்டி வருவதால் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்குதானாம். தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்தவர் பூர்ணிமா கோவிந்தராஜூலு.

பின்னர் சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தனர். 40 ஆண்டுகளுக்கு முன்னரே கனடாவில் குடியேறிவிட்டார். அங்கு கனேடிய அரசின் ஆராய்ச்சியாளராக உள்ளார். கனேடிய குடிமகனை திருமணம் செய்த அவர் பின்னர் விவாகரத்து செய்துவிட்டார்.

இவர் திடீரென கனடாவில் இருந்து சென்னை போலீசுக்கு இ மெயில் மூலம் புகார் அனுப்பியிருந்தார். அதில் சென்னையைச் சேர்ந்த தமது உறவினர் ஒருவரால் 10 வயது முதல் 13 வயது வரை 3 ஆண்டுகாலம் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவருக்கு தற்போது தண்டனை வாங்கித் தர வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது போலீசாரை திடுக்கிட வைத்தது.

விசாரணை இதனடிப்படையில் சென்னை வந்த பூர்ணிமா கோவிந்தராஜுலு முறைப்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் டிஜிபி அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரிடம் நேற்று 1 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

10 வயதில் பலாத்காரம் இந்த விசாரணை முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பூர்ணிமா கோவிந்தராஜூலு கூறியதாவது: நாங்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தோம். அப்போது 10 வயது சிறுமியாக இருந்தேன். என் உறவினர் ஒருவர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். 3 ஆண்டுகாலம் என்னுடன் செக்ஸ் அனுபவித்தார். அப்போது நான் வயதுக்கு வரவில்லை.

சிறுமிகளிடம் சில்மிஷம் கடந்த 1986-ம் ஆண்டு நாங்கள் கனடாவுக்கு குடிபோனோம். என்னிடம் தவறாக நடந்த உறவினர் அப்போதே பல சிறுமிகளிடம் இதேபோல் நடந்து கொண்டிருக்கிறார். பின்னர் பொறியாளராக ஓய்வு பெற்றுவிட்ட அந்த பெரிய மனிதருக்கு இப்போது வயது 73.

இப்போதும் சில்மிஷம் அவரது மகனும் மகளும் அமெரிக்காவில் குடியேறிவிட்டனர். ஆனாலும் இப்போதும் அந்த பெரிய மனிதர் சிறுமிகளிடம் முறைகேடாக நடந்து கொள்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் அவருக்கு பாடம் புகட்டவே இந்த புகாரை கொடுத்திருக்கிறேன். இவ்வாறு பூர்ணிமா கோவிந்தராஜூலு கூறினார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News