கலிபோர்னியா (California): அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 13 பேரை வீட்டில் சிறைப்பிடித்து வைத்த குற்றத்திற்காக அவர்களின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்தது பெர்ரிஸ் நகரத்தில். டேவிட் ஆலன் டர்ப்பின், அவரின் மனைவி லூயிஸ் ஆனா டர்ப்பின் ஆகிய இருவரும் பிள்ளைகளை வதைத்து ஆபத்துக்கு ஆளாக்கிய குற்றச்சாட்டுகளின் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுக்குள் அடைக்கப்பட்ட பிள்ளைகள், 2க்கும் 29க்கும் இடைப்பட்ட வயதினர்.
அவர்கள் அனைவரும் உடன்பிறந்தவர்களாக இருப்பர் என நம்பப்படுகிறது.
அந்த 13 பேரில் சிலர் கட்டிலில் சங்கிலிகளால் உப்பட்டிருந்தனர்.
அவர்களில் சிறுமி ஒருவர் தப்பித்துக் காவல்துறையின் அவசர எண்ணைத் தொடர்புகொண்டார்.
உடல் மெலிந்த நிலையில் இருந்த சிறுமி, தனது பெற்றோர், தன்னுடன் பிறந்த 12 பேரையும் பிடித்து வைத்திருந்ததாக காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார்.
வீடு இருட்டாகவும் அசுத்தமாகவும் இருந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
பிள்ளைகளைச் சிறைபிடித்து வைத்ததற்கான காரணத்தைப் பெற்றோரால் தெளிவாகக் கூறமுடியவில்லை.
13 பிள்ளைகளும் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.