எங்களது நிரந்த தீர்வு சமஷ்டி முறையானது அல்லது கூட்டு சமஷ்டியானது என முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றைய தினம் (28) தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
இந்தியாவுடன் பேசி 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் வட மாகாணசபையை கொண்டு வர நாங்கள் ஆயத்தங்களை செய்யும் போது அவர்கள் அதற்கு எதிராக பொய் பேசும் கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர். அதாவது வட மாகாண சபை விரைவிலே வரும் நாங்கள் அதிலே பங்குப்பற்ற வேண்டும் இப்போதிலிருந்தே நாங்கள் இந்த பொய்களை சொல்லிக்கொண்டு வந்தால் தான் மற்றவர்களுக்கு மேலாக எங்கள் மக்களிடம் அந்த பொய்யை உண்மையாக்க முடியும் என்ற எண்ணத்திலே அவர்கள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
உண்மையிலே 13ஆவது திருத்தச் சட்டம் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு அல்ல அதிலே சைக்கிள் கட்சியாக இருந்தால் என்ன எங்களது கட்சியாக இருந்தால் என்ன அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை.
அந்த 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வந்த காலத்திலே அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்மந்தன் ஆகியோர் 13ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட காலப்பகுதிலேயே ஒக்டோம்பர் மாதம் 28ஆம் திகதி ரஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள்.
எங்களுக்கு இது ஒரு போதுமான சட்டம் அல்ல என்று அவர்கள் கூறியிருந்தார்கள் எனினும் அந்த குறைபாடுடைய சட்டம் தான் எங்களுடைய அரசியல் யாப்பிலே உள் நுழைந்தது. இதுவரை காலமும் இந்த அரசியல் யாப்பிலே இருக்கின்றது. இந்த அடிப்படையில் நாங்கள் கேட்கும் கோரிக்கை என்னவென்றால் இருக்கும் சட்டத்தை நீங்கள் நடைமுறைப்படுத்துங்கள் என்று இதில் என்ன பிழை இருக்கின்றது என்பது தொடர்பில் தெரியவில்லை.
புதிதாக நாங்கள் எதனையும் கேட்டகவில்லை.இதை வைத்து கொண்டு இருக்கும் சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துங்கள் நாங்கள் 13ஆம் திருத்தச் சட்டத்திற்குள்ளளேயே நாங்கள் போய்விட்டோம் வேறு எதும் எங்களுக்கு தேவையில்லை என்று ஒரு மாயை உருவாக்கத்தான் இந்த கட்சி கூட்டங்களை தொடங்கியுள்ளனர் அத்துடன் 30ஆம் திகதி தொடங்க போகிறார்கள். எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]