இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில், ஆயிரத்து 223 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைய, இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின்படி 680 முறைப்பாடுகள் ஆணைக்குழுவின் எல்லைக்குள் காணப்பட்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுவதுடன், 132 முறைப்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கைக்கு அமைய, அதிகளவிலாக 244 முறைப்பாடுகள் கண்டி மாவட்டத்திலிருந்து கிடைத்துள்ளதாகவும், மாத்தறையிலிருந்து 170 முறைப்பாடுகளும், அநுராதபுரத்திலிருந்து 141 முறைப்பாடுகளும், மட்டக்களப்பிலிருந்து 80 முறைப்பாடுகளும்,
கல்முனையிலிருந்து 78 முறைப்பாடுகளும், வவுனியாவிலிருந்து 79 முறைப்பாடுகளும், யாழ்ப்பாணத்திலிருந்து 73 முறைப்பாடுகளும், அம்பாறையிலிருந்து 56 முறைப்பாடுகளும், பதுளையிலிருந்து 55 முறைப்பாடுகளும், திருகோணமலையிலிருந்து 45 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நான்காவது காலாண்டுப் பகுதியில் ஆணைக்குழுவால் 67 தசம் 9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.