சிறுவர் இல்லத்தில் இருக்கும் 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டில், பிக்குகள் இருவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல், ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 32 தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, விசாரணைகளிலிந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட பிக்குகள் இருவரும் 16 மற்றும் 17 வயதுகளைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனையோர் 20 மற்றும் 22 வயதுக்கு இடைப்பட்டவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் வயது குறைந்தவர்கள், புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும், ஏனையோர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் எதிர்வரும் 08 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரும், வைத்திய பரிசோதனைக்காக, குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறுவர் இல்லத்தில், 36 சிறுவர்கள் இருக்கின்றனர்.