நாட்டில் 19 மாவட்டங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, 11 லட்சத்து 97 ஆயிரத்து 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தினை சேர்ந்த ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 284 குடும்பங்களை சேர்ந்த 4 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 72 ஆயிரத்து 989 குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 63 ஆயிரத்து 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.