முதல் உலகப்போரில் மாயமான ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல் 103 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் உலகப்போரின் போது ஆஸ்திரேலியா கடற்படைக்கு சொந்தமான எச்.எம்.ஏ.எஸ். ஏஇ-1 என்ற நீர்மூழ்கி கப்பல் இடம்பெற்றது.
கடந்த 1914-ம் ஆண்டு அக்கப்பல் பப்புவா நியூகினியா கடல் பகுதியில் திடீரென மாயமானது. 800 டன் எடையுள்ள இந்த கப்பல் பப்புவா நியூ கினியாவில் பார்க் தீவுகள் பகுதியில் 300 மீட்டர் தண்ணீருக்கு கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாயமான இந்த கப்பலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கடற்படை வீரர்கள் 35 பேர் இருந்தனர். கப்பலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இக்கப்பலின் உடைந்த பாகங்கள் பப்புவா நியூ கினியாவில் பார்க் தீவுகள் பகுதியில் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து நீருக்குள் மூழ்கி சென்று தேடும் டிரோனை பயன்படுத்தி நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்களை நீர்மூழ்கி வீரர்கள் குழுக்கள் கண்டுபிடித்து.
ஆனால் இக்கப்பலில் பயணம் செய்த ஊழியர்களின் உடல்கள் மீட்கப்பட்டது குறித்த எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.