102 வயது மூதாட்டியை அதிரடியாக கைது செய்த பொலிஸ்: அதிர வைக்கும் காரணம்
அமெரிக்காவில் 102 வயது மூதாட்டியின் விசித்திர ஆசையை அங்குள்ள பொலிசார் நிறைவேற்றி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் பலருக்கும் தமது வாழ்நாளில் இவைகளை சாதிக்க வேண்டும் அல்லது நிறைவேற்ற வேண்டும் என்ற பட்டியல் ஒன்று இருக்கும்.
அத்தகைய பட்டியல் காலகட்டங்கள் மாறுகையில் மாறுபடும் ஆனால் மத்திய அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் குடியிருந்துவரும் Edie Simms என்ற 102 வயது மூதாட்டிக்கு நீண்ட காலமாக இருந்த ஒரே ஆசை பொலிசாரால் கைதாகி ஒரு நாள் சிறையில் செல்ல வேண்டும் என்பதே.
அது மட்டுமல்ல செயின்ட் லூயிஸ் பகுதியில் அமைந்துள்ள முதியோருக்கான விடுதியில் அந்த ஒரு நாளையும் தொண்டு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மூதாட்டி கோரிக்கை வைத்தார்.
முதாட்டியின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட காவல்துறை திடீரென்று ஒரு நாள் அவரது குடியிருப்புக்கு சென்று கைது செய்தது.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் புடைசூழ அவரை காவல் நிலையம் அழைத்து வந்த பொலிசார் அவர் கேட்டுக்கொண்டபடி குறிப்பிட்ட முதியவர் இல்லத்தில் பணியாற்ற அனுமதித்தது.
பொலிசாரின் இந்த கைது நடவடிக்கையை அடுத்து அந்த மூதாட்டியின் நீண்ட கால கனவு ஒன்று நிறைவேறியுள்ளது.
கை விலங்கும் பொலிஸ் வாகனத்தில் பயணமும் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக அந்த மூதாட்டி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.