மேர்சிடஸ் பென்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் ரஷ்யாவில் நடைபெற்ற ரஷ்ய க்றோன் ப்ரீ போட்டியில் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த க்றோன் ப்ரீ போட்டியில் கார்ப்பந்தய போட்டி வரலாற்றில் 100 வெற்றிகளை ஈட்டிய முதலாவது கார்பந்தய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இந்த ஆண்டில் இதுவரை நடைபெற்ற 15 ‘போர்முலா 1 ‘ கார்பந்தய போட்டிகளில் நேற்றைய தினம் (26) நடைபெற்று முடிந்த ரஷ்ய க்றோன் ப்ரீ வெற்றியுடன் இந்த ஆண்டில் லூயிஸ் ஹமில்டனின் 5 ஆவது வெற்றியாக அமைந்தது.
53 சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியை ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் 41.001 செக்கன்களில் ஹமில்டன் நிறைவு செய்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலமாக 25 புள்ளிகளைப் பெற்ற ஹமில்டன், மொத்தமாக 246.5 புள்ளிகளைப் பெற்ற சர்வதேச காரோட்ட வீரர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.
‘போர்முலா 1’ கார் பந்தயப் போட்டிகளில் அதிக வெற்றிகளை ஈட்டியவர்களில் பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் 100 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஜேர்மனியின் மைக்கல் சூமாக்கர் 91 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலும், செபஸ்டியன் வெட்டல் 53 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]