உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொள்ளவும், புதிய தேர்தல் முறைமை தொடர்பில் கற்றறிந்து கொள்வதற்காகவும் நான்கு நாடுகளிலிருந்து 10 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அந்தவகையில், கொரியாவிலிருந்து இரண்டு பிரதிநிதிகள், இந்தோனேசியாவிலிருந்து இருவர், மாலைதீவிலிருந்து இருவர், இந்தியாவிலிருந்து நால்வர் என 10 பேர் வந்துள்ளனர் எனவும், அவர்கள் வியாழக்கிழமையிலிருந்து தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.
மேலும், இவர்கள் கண்காணிப்பாளர்கள் அல்ல என்றும், இத்தேர்தலில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் எவரும் அழைக்கப்படவில்லை என்றும் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டார்.
அத்தோடு, புதிய முறைமையின்கீழ் நடைபெறவுள்ள முதலாவது தேர்தல் இது என்பதால், தேர்தல் முறைமை குறித்து கற்றறிந்துகொள்வதே இந்தப் பிரதிநிதிகளின் பிரதான நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.