இந்த சாதத்தை காலை வேளையில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கோ அல்லது அலுவலகத்திற்கு செல்லும் போதோ, விரைவில் சமைப்பதற்கு ஏற்ற சிறந்த உணவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சாதம் – 2 கப்
கேரட் – 2
கறிவேப்பிலை – சிறிது
பிரியாணி இலை – 1
கிராம்பு – 3
பட்டை – 1 இன்ச்
ஏலக்காய் – 1
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே எண்ணெயில் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய, பின்பு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து, 7-8 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி, சாதத்தை போட்டு, 3 நிமிடம் கிளறி இறக்கி, மேலே முந்திரியை தூவினால், சுவையான கேரட் சாதம் ரெடி!!!
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]