இன்று முதல் 10 நாள்கள் வரை நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று அறியமுடிகிறது.
அம்பாறை மற்றும் கண்டியில் ஏற்பட்ட இனக்கலவரங்களை அடுத்தே அரச தலைவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று அறியமுடிகிறது.
இந்தத் தகவலை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றின் அனுமதி பெற்ற பின்னர் இது தொடர்பான அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.