10 கோடி பேரை கவர்ந்த வீடியோ: கோழிமுட்டையை வைத்து சாதனை படைத்த மாணவர்கள்

10 கோடி பேரை கவர்ந்த வீடியோ: கோழிமுட்டையை வைத்து சாதனை படைத்த மாணவர்கள்

கோழி குஞ்சுகள் உருவாகுவதற்கு முட்டை ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பானைச் சேர்ந்த மாணவர்கள் பொய்மையாக்கியுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிபா அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவர்கள் அந்த நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளனர்.

ஒரு சாதாரண பிளாஸ்டிக் உறையை எடுக்கும் ஒரு மாணவி அதை ஒரு கூம்பு வடிவிலான பொருளின்மீது வைத்து உறையின் அடர்த்தியை குறைக்கும் வகையில் அதை இழுத்து பெரிதாக்குகிறார். அந்த உறையை ஒரு பிளாஸ்டிக் டம்ளரின்மீது போர்த்தி, முட்டையை உடைத்து டம்ளருக்குள் ஊற்றுகிறார்.

பின்னர், திறந்த நிலையில் அந்த டம்ளரை பொரிப்பானில் (இன்குபேட்டர்) வைத்த பின்னர் முட்டையின் மஞ்சள் கருவின் சிறு துணுக்காக தோன்றும் உயிரணு மூன்றே நாட்களில் இதயமாகவும், அடுத்த 21 நாட்களில் முழு உடல் வளர்ச்சியுடன் முடி, இறக்கை போன்றவையும் வளரப்பெற்ற கோழிக்குஞ்சாக நடைபோடுகிறது.

இதன்மூலம், முட்டையின் ஓட்டுக்குள்தான் குஞ்சுகள் பொரிக்கும் என்னும் பழைய சித்தாந்தம் தவிடுப்பொடியாகி உள்ளது.

இந்த காட்சிகள் வீடியோவாக வெளிவந்த சில நாட்களில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

அந்த வீடியோ, உங்கள் பார்வைக்கும்…

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News