முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேசத்தில் வேட்பாளர் ஒருவர் தனது கடை யில் 10க்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டை களை வைத்தி ருந்த குற்றச்சாட்டில் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வெலி ஓயாப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட வேட்பாளர் தென்பகுதிக் கட்சி ஒன்றைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது.