1.7 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகமை பகுதியில் வைத்து 1.7 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் 27 வயதான இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உண்டியல் முறை மூலம் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக குறித்த இளைஞர் பணத்தை வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து, வெலிகமை பகுதியில் வீடொன்றை சோதனைக்குட்படுத்தியபோது வெளிநாட்டு நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
18,208 அமெரிக்க டொலர்கள், 20,035 யூரோ, 645 ஸ்ரேலிங் பவுண்ட், 100,000 ஜப்பானிய யென், 1,000 கட்டார் றியால், 18,500 திர்ஹாம் ஆகிய வெளிநாட்டு நாணயத்தாள்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட வெலிகமை கல்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரான இளைஞர் மேலதிக விசாரணைகளையடுத்து, மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.