1, 10, 19, 28) சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள் 19.12.2017 முதல் 28.03.2020 வரை.
இந்த சனிப்பெயர்ச்சியில், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள்.
பழைய கடன்களும் வசூலாகும். எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனஅழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களால் நன்மை அடைவீர்கள். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள். மன உறுதி உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்கள் சூடுபிடிக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
சேமிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பெற்றோர் மற்றும் நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மன வருத்தங்கள் முற்றிலும் நீங்கும். குறைந்த அளவு முதலீட்டிலும் அதிக லாபத்தை அள்ளுவீர்கள். எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும்.
கடனாகக் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கைக்கு வந்துசேரும். சென்ற இடத்திலெல்லாம் பிரச்னையை சந்தித்தவர்கள்கூட இந்தக் காலகட்டத்தில் விரும்பி வரவேற்கப்படுவார்கள். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். என்ன நடக்குமோ என்று பயந்த விஷயங்கள்கூட மகிழ்ச்சிகரமாக முடிவடையும்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், எட்டி இருந்து பழகுவதே நல்லது. சகஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனை அதிகரித்துக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். சமயோசித புத்தியால் பிரச்னைகளிலிருந்து தப்பிப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள்உண்டாகாது.
அரசியல்வாதிகள், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். முயற்சிகள் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர் ஆதரவுடன் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
சிறப்பு பரிகாரம்:
அரளிப்பூ மாலையை அருகிலிருக்கும் சிவனுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் சிவாய நமஹ:” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 3, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள் (2, 11, 20, 29) 19.12.2017 முதல் 28.03.2020 வரை
அனைவரையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான காரியங்களையும் திட்டமிட்டு வெற்றியாக முடிக்கும் சக்தி கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே, நீங்கள் யாரையும் சாராமல் சுயஉழைப்பால் முன்னேறும் திறமை உள்ளவர்கள். எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும் மனஉறுதி உடையவர். இந்த சனிப்பெயர்ச்சியில் கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்து கொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்னைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்து, வழக்குகளை முடித்துக் கொள்ளவும். பிடிவாதங்களைத் தளர்த்தி, அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தினர்கூட உங்கள் பெருந்தன்மையை உணராமல், உங்களுடன் வழக்குத் தொடுக்கலாம். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். இந்தக் காலகட்டத்தில் புதியவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சில தடைகள் ஏற்பட்டாலும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிவாகை சூடும். கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல்நலம் சிறப்படையும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு இந்தப் பெயர்ச்சியின் மூலம் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் சாதகமாக நடந்துகொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய பிரயத்தனப்படுவீர்கள். முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்க கடுமையாக முயற்சி செய்யவேண்டியதிருக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து குறையலாம். நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும்போது நிதானம் தேவை. பொறுப்புகள் கூடும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். செல்வாக்கு உயரும். பணவரவு அமோகமாக இருக்கும். ஆனாலும் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரித்துச் செல்வார்கள். பணவரவு சீராக இருக்கும். உடல்நலம் கெடலாம். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். எங்கும், எப்போதும் பேச்சில் நிதானம் தேவை. மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆனாலும் ஒருமுறைக்கு இருமுறை படிக்கவும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனங்களை கவனமாக இயக்குங்கள். அமிலம் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
பரிகாரம்:
திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வரவும்.
சிறப்பு பரிகாரம்:
மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 6, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.
சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள் (3, 12, 21, 30) 19.12.2017 முதல் 28.03.2020 வரை!
எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் மூன்றாம் எண் அன்பர்களே! பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உழைப்பால் மற்றவர்களையும் வாழவைப்பீர்கள். உங்களிடம் வாக்கு கொடுப்பவர்கள் அதன்படி நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில், சற்று மந்தமான நிலை உண்டாகலாம். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளலாம். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமல் போகும். அதேநேரம் பல சாதகமான நிலைமைகளும் வரஇருக்கின்றன. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்படும். அதிகரிக்கும் செலவுகளை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.
அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்ய வேண்டும். உங்கள் ஆலோசனைகள் உங்களுக்குப் பயன்படுவதைவிட மற்றவருக்குப் பயன்படும். நீரிழிவு, கல்லீரல் நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களை முற்றிலும் விடுவது நல்லது. இந்த பெயர்ச்சியினால் உங்கள் மனதில் அவ்வப்போது தைரியமின்மை தோன்றும். இதனால் அனைத்துச் செயல்களிலும் சந்தேகத்தோடு ஈடுபடுவீர்கள். மற்றபடி உடல் பொலிவடையும். ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள். மனப்பக்குவம் ஏற்படும். எனவே அதிகம் கவலைப்படத் தேவையில்லை. புதிய முயற்சிகளில் அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். முக்கியத் திட்டங்கள் நிறைவேறும்.
இதனால் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களை அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பணவரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். வேலைத் திறன் பளிச்சிடும்.
வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும்.
மற்றபடி திறமையுடன் செய்துவரும் வியாபாரத்தால் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள்மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சிக்கி மாட்டிக் கொள்ளவேண்டாம். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால் வெற்றிவாகை சூடலாம். மற்றபடி வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சககலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறர் வார்த்தைகளை நம்பவேண்டும். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும். மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூரில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் சாதனை புரிவீர்கள்.
பரிகாரம்:
வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர் உடல்நலம் சிறக்கும்.
சிறப்பு பரிகாரம்:
துளசியை அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு சமர்ப்பித்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ:” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 3, 5, 6.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், புதன், வியாழன்.
சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள் (4, 13, 22, 31) 19.12.2017 முதல் 28.03.2020 வரை
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நான்காம் எண் அன்பர்களே, நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். இந்த சனிப்பெயர்ச்சியில், பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொதுநலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.
குடும்பத்தில் குதூகலம் நிறையும். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பங்குச் சந்தை, முதலீடு இனங்கள் மூலம் திடீர் பணவரவு உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவுசெய்து மகிழ்வீர்கள். நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும்.
தனித்து நின்று போட்டிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். அவ்வப்போது சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பதற்குச் சிறிது செலவு செய்ய நேரிடும்.
மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிக்க சனி பகவான் உதவுவார். சிலர் புதிய இல்லங்களுக்கு மாறுவார்கள். பேராற்றல் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சாமர்த்தியசாலி என்று பெயர் எடுப்பீர்கள். உற்றார், உறவினர் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நல்ல செய்திகள் வந்தடையும். இதனால் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.
உத்யோகஸ்தர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். இதற்குப் பயனும் உண்டு. உடல் உழைப்பிற்கு மேல் இருமடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களும் பலன் தரும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச்சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்க்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள்.
தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தோர் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரசாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் தக்க சமயத்தில் தேவைக்கேற்ப உதவுவார்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள்.
சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விரயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதேசமயம் குடும்பத்தில் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டு பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் முன்னேற்றம் தரும். சமூகத்தில் அந்தஸ்து, அதிகாரம் கிட்டும்.
சிறப்பு பரிகாரம்:
வில்வ இலைகளை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீருத்ராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 3, 5, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், புதன், வியாழன்.
சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள் (5, 14, 23) 19.12.2017 முதல் 28.03.2020 வரை!
எதிலும் துடிப்புடனும், முழுமனதுடனும் ஈடுபடும் ஐந்தாம் எண் அன்பர்களே, எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் நீங்கள். கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விலக்குவீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க நினைப்பவர்கள். தலைமைதாங்கும் பண்பை இயற்கையிலேயே உடையவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில், சனி பகவான் செழிப்போடு செல்வாக்கையும் அள்ளித் தருவார்.
அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகபபடுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெற அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளைப் பெறுவீர்கள்.
மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்படுவீர்கள். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலா சென்று வருவீர்கள்.
பதற்றப்படாமல் செயல்களை செய்து முடிப்பீர்கள். நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதிருங்கள். உங்கள் கருத்துகளை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள்.
வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. நடை, உடை, பாவனைகளில் அழகு ஏற்படும்.
உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சிலகாலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும், எதிலும் கவனமாக இருக்கவும்.
புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே கொள்முதல் செய்து, விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள்.
loading…
அவர்களால் உங்கள் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். மறைமுக எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் செயலாற்றவும்.
பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள்.
பரிகாரம்:
பெருமாள் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
சிறப்பு பரிகாரம்:
மரிக்கொழுந்தை அருகிலிருக்கும் பெருமாளுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீஅச்யுதாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 5, 7.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், புதன், வெள்ளி.
சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள் (6, 15, 24) 19.12.2017 முதல் 28.03.2020 வரை
முன்வைத்த காலை பின்வைக்காமல் வெற்றி நடைபோடும் ஆறாம் எண் அன்பர்களே, நீங்கள் யாரையாவது நம்பிவிட்டால் வாரி வழங்குவீர்கள். எடுத்த முடிவிலிருந்து சிறிதும் இறங்கி வரமாட்டீர்கள். எந்த சிரமங்களையும் சமாளித்து வெற்றிக்கனியை பறிப்பீர்கள். கொஞ்சம் கர்வம் உடையவர்கள் நீங்கள்.
இந்த சனிப்பெயர்ச்சியில், இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் தேடிவரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்துகொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும்.
மனஅழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். வம்பு, வழக்குகளிலிருந்து விடுபட்டு புதிய மனிதராக ஆவீர்கள். ஆன்மிகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். சில நாட்களாக இழுபறியாக இருந்த உங்கள் சகோதர வழியில் சில அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசவேண்டும். உங்களைப் பற்றிப் புறம்பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிட
மிருந்து நாசூக்காக விலகுவதே நல்லது. கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். குறுக்குவழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம்.
எந்த வேலையை எடுத்தாலும் உறுதியான எண்ணத்துடன் பணியாற்ற வேண்டும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் நன்றாகவே முன்னேறுவீர்கள். சிலருக்கு நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் சூழ்ச்சிகளில் சிக்கும் சங்கடம் ஏற்படலாம். அரசாங்கம் வாயிலாக சிறு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவை விரைவில் மறைந்துவிடும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். மனவலிமை அதிகரிக்கும். செயல்களில் சுறுசுறுப்பு கூடும். உங்களை நீங்களே அறிந்து கொண்டு சமுதாயத்திற்குப் பயன்படுவீர்கள். தெய்வ வழிபாட்டிற்குத் தக்க பலன் கிடைக்கும். காரியங்களைப் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிப்பதே சிறந்தது. உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. ஆனாலும் சக ஊழியர்கள் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் காலதாமதம் ஏற்படலாம். உடலில் சோர்வும், மனதில் தெளிவின்மையும்கூட உண்டாகலாம்.
ஆனால், இவற்றை மீறி சனி கெளரவமான பதவிகளை வழங்குவார். இதனால் உங்களுக்கு உறுதுணையாக இருந்துவந்த மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறையக் கூடும். உங்களின் கடமைகளை பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம். வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். வாணிப வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்களால் சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேசவேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள்.
பணவரவும் நன்றாகவே இருக்கும்.
கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பை அதிகப்படுத்தி, கர்வத்தை விட்டொழித்து, திறந்த மனதுடன் இயங்கினால் புகழ் பெறலாம். மற்றபடி சக கலைஞர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் சில முடிவுக்கு வரும். பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை
நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து, விழாக்களில் கலந்துகொண்டு உற்காசம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டு
களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.
பரிகாரம்:
அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
சிறப்பு பரிகாரம்:
சர்க்கரைப் பொங்கல் செய்து வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு ஆலயத்தில் விநியோகம் செய்யவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மையை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 7 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 5, 6, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.
(7, 16, 25) சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள் 19.12.2017 முதல் 28.03.2020 வரை
வெள்ளை மனம் கொண்டு எளிதில் யாரையும் எதிலும் நம்பிவிடும் பழக்கம் உடைய ஏழாம் எண் அன்பர்களே, அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருப்பார். இந்த சனிப்பெயர்ச்சியில், உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். அதேநேரம் இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டால் செயல்கள் அனைத்தும் திட்டமிட்டபடி குறிக்கோள்களை எட்டும். ஏமாற்றங்களிலிருந்து தப்பிப்பீர்கள்.
புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துகளில் திடீரென்று பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவை தாமாகவே தீரும். தீயவர்கள் உங்களை விட்டு எளிதாக விலகிவிடும் அதிசயம் நிகழும். அதேநேரம் இளைய சகோதரர்களுடனான உறவில் சில சலசலப்பு ஏற்படும். ஆனாலும், விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு சமாளிப்பீர்கள். சிலர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குக் குடிபெயர்வார்கள். தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். புகழும், கௌரவமும் உயரும். இதுநாள்வரை தேவையற்ற வீண்பழி சுமந்த சில அன்பர்கள் அவற்றிலிருந்து விடுபடுவார்கள். முயற்சிகள் பலமடங்காக உயர்ந்து, வெற்றி கிடைக்கும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலைதூக்கலாம்.
கவனத்துடன் தவிர்க்கவும். பேச்சாற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். உங்கள் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடிவரும். வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்கு குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்தி, நேர்வழியில் செல்லவும்; பல பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சகஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்வீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள்.
வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் தேடிவரும். பயணங்களால் நன்மை உண்டாகும். கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்கள் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சககலைஞர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மிக பலம் பெறுவீர்கள். மற்றபடி அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.
பரிகாரம்:
குலதெய்வத்தை தினமும் வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
சிறப்பு பரிகாரம்:
காக்கைக்கு தினமும் சாதம் வைத்து வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீமஹாகணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 6, 7, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்.
சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள் (8, 17, 26) 19.12.2017 முதல் 28.03.2020 வரை
எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் எட்டாம் எண் அன்பர்களே, நீங்கள் தோல்வியைக் கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண விரும்புபவர். மற்றவர்களுக்கு உதவி செய்து பட்டம் பதவி பெறுவீர்கள். திறமைகள் பல கொண்டவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில், பலவிதமான குழப்பங்கள் இருந்தும் திட சிந்தனைகளுடன் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படலாம்.
குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போகலாம். எப்போதும்போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். அதேசமயம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நண்பர்
களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறவேண்டும்.
உடலிலிருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள். பந்தயங்கள், போட்டிகளிலும் வெற்றிவாகை சூடுவீர்கள். பெற்றோர் வழியில் நிலவிவந்த மனக்கஷ்டங்கள் தீர்ந்து, குடும்பத்தில் குதூகலம் நிறையும். பிரபலம் ஆவீர்கள்.
நாடி வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதேசமயம் பொருளாதாரத் திட்டங்களில் சிறிது தொய்வுகள் ஏற்படலாம், இதனால் சிலநேரங்களில் மனம் நொந்து போவீர்கள். வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள், உங்களிடம் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், தனித்தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள். வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள்.
தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள்.
அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதைரியம் குறையும். இச்சமயங்களில் சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகம் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்குக் குறைவு ஏற்படாது. தன்னம்பிக்கை உயரும். எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள். வியாபாரிகளுக்கு கடும் முயற்சிகளுக்கு பின் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும்.
தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன்சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.
தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்கள் முயற்சிகளை எதிர்க்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்கவைத்துக் கொள்வீர்கள்.
கற்பனை சக்தி ஊற்றுபோல் பெருகும். இது வருமானமாகவும் மாறி பயன் தரும். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும். ஆன்மிகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும்.
வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும். ஆனால், பெற்றோர் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். வெளி விளையாட்டுகளிலும் வெற்றிவாகை சூடுவீர்கள்.
பரிகாரம்:
துர்க்கை அம்மனை வியாழக்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.
சிறப்பு பரிகாரம்:
செவ்வரளி மாலையை அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீம்துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 3, 7, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள் (9, 18, 27) 19.12.2017 முதல் 28.03.2020 வரை.
எல்லோரிடமும் கண்டிப்பாகப் பழகும் ஒன்பதாம் எண் அன்பர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர். துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடைய விரும்புபவர்கள். குறிக்கோளுடன் வாழ்ந்து எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில், உடல் சோர்வு அதிகரிக்கலாம். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும்.
அவர்கள் உங்களுக்கு எதிராக சிலசமயம் சதிவேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம். துர்க்கையன்னையை தொடர்ந்து வழிபட்டால், எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது. தர்ம காரியங்களைச் செய்வீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றியடைவதில் ஐயமேயில்லை. அனுகூலமில்லாத விஷயங்களையும் சாதகமாக மாற்றிக்கொள்ளும் புத்தி சாதுர்யம் ஏற்படும்.
தனித்தன்மையை இழக்க மாட்டீர்கள். அடுத்தவர் உங்களுக்கு அறிவுரை கூறும்படி நடந்து கொள்ளமாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள் சாதகமாகவே அமையும். நீண்டதூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். கடுமையாக உழைத்துச் செய்யும் காரியங்களில் வெற்றி நிச்சயம். தார்மீக சிந்தனைகள் மேலோங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
உங்கள் உழைப்பு வீண் போகாது. இதுநாள்வரை இருந்த சோர்வும் அயர்ச்சியும் மறையும். தேக ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். தாயார் வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் செல்வாக்கு உயரும். செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து முடிக்க வழிபிறக்கும். திட்டங்களை சரியாகத் தீட்டி, படிப்படியாக, வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள்.
புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பெரியோர் ஆதரவு எப்போதுமிருக்கும். ஓய்வுநேரத்தில் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்கமாட்டார்கள். ஆனால் சகஊழியர்கள் உங்களுக்குப்
பக்கபலமாக இருப்பார்கள்.
உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம். வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கைக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணம் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி, ஆதாயம் பார்ப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள்.
சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே இருக்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழிவகையுண்டு. பெற்றோர் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சகமாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அவர்களிடம் அனாவசிய சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். மற்றபடி உடல் நலம் நன்றாக இருக்கும். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்தால் மேலும் உடல் வலிமை பெறலாம்.
பரிகாரம்:
ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும், சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
சிறப்பு பரிகாரம்:
வியாழக்கிழமைதோறும் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் சத்குருவே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 3, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.