உலக மக்கள் தொகையில் 5 சதவீத மக்கள் ஹைபர்கேமியா என்ற பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதற்கு உரிய முறையில் சிகிச்சை பெற்றால் முழுமையான நிவாரணம் பெறலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய உடல் இயக்கத்திற்கு பொட்டாசியம் என்ற நுண்ணூட்டச்சத்து அவசியம். இந்த நுண்ணூட்டச்சத்து அன்றாடம் நாம் உட்கொள்ளும் உணவின் மூலம் உடலால் கிரகித்துக் கொள்ளப்படுகிறது. இந்த சத்தின் அளவு, இயல்பான அளவைவிட அதிகமாக இருந்தால் அதனையே ஹைபர்கேமியா என்று குறிப்பிடுகிறார்கள்.
இயல்பான அளவை விட அதிக அளவில் பொட்டாசியம் சத்து உடலில் இருந்தால் இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
சீரற்ற இதயத் துடிப்பு, மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, குமட்டல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
அவர்கள் ரத்த பரிசோதனை செய்து, ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறித்து துல்லியமாகக் கணக்கிடுவர். அவற்றின் அளவு அதிகமாக இருந்தால் அதனை இயல்பான நிலைக்கு மாற்றம் பெறுவதற்கான உணவுமுறையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
சிலருக்கு ரத்த பரிசோதனையை விரிவாக மேற்கொண்டு, அதற்குரிய மருந்து, மாத்திரைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
எம்முடைய உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிட்டால் இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, பார்வைத் திறன் பாதிப்பு போன்றவை ஏற்படுவது போல், பொட்டாசியத்தின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்றால், தசை பலவீனம், உணர்வில்லாத நிலை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளவர்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுப் பொருள்களையும் முற்றாக தவிர்க்க வேண்டும். ஹைபர் கேமியோ பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவரின் பரிந்துரையை புறக்கணித்தால், அவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
டொக்டர் ஸ்ரீதேவி
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]